• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் இணையதள வசதியுடன் நவீன வசதிகளுடன் கணினி, வகுப்பறை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வாசுமன்னார் தலைமை ஏற்று பேசினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மனீஷா முன்னிலை வகித்து பேசினார். பள்ளித் தலைமையாசிரியர் மோகன்தாஸ் ஆண்டு அறிக்கை வாசித்தார். பட்டதாரி ஆசிரியை கோமதி வரவேற்று பேசினார்.

விழாவில் வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலர்கள் நல்லுச்சாமி, முருகேஸ்வரி ஆகியோர் ஓட்டப்பந்தயம், கபாடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்கள்

இந்நிகழ்ச்சியில் வட்டார வளமையம் மேற்பார்வையாளர் செல்வராணி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் லோகநாதன், தொழில் அதிபர்கள், தென்றல் ஜெயக்குமார், சீனிவாசன், அலோசியஸ், பட்டதாரி ஆசிரியர்கள் நிர்மலாதேவி, தமிழரசி, ஜாக்குலின்மேரி, இடைநிலை ஆசிரியர் வேலுமணி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட ஏராளமான ஒரு பங்கேற்றனர்.இடைநிலை ஆசிரியர்
நித்தியானந்தம் நன்றி கூறினார்.

விழாவின் நிறைவாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.