• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தோவாளை சானல்உடைப்பு-நடவடிக்கை எடுக்காத வருவாய்துறையை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சேனல் பழுது அடைந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அதை சரி செய்யாத மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கன்னியாகுமரி மாவட்ட பாசனத்திற்கு முதுகெலும்பாக விளங்கிவரும் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், கடந்த சில மாதங்களாக தோவாளை சானலில் திறந்து விடப்படவில்லை. கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் இந்த சேனலில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கன்னி பூ சாகுபடி முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது. இதைப்போன்று நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் உள்ள சாலைகளால் தினம் தினம் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்ட செயலாளர் ஆல்காலித் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைகள் சிறுத்தை கட்சினர் விவசாயிகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.