• கஷ்டப்படுத்த ஒரே ஒரு வார்த்தை போதும்,
ஆறுதல் சொல்லத் தான் ஆயிரம் வார்த்தைகள் தேவைப்படுகின்றது…
• கோபம் எனும் இருட்டில் விழுந்து விடாதே !
பிறகு பாசம் எனும் பகல் கண்ணுக்கு தெரியாது …
• இதுவரை நடந்ததை யோசிப்பதை விட
இனி எப்படி நடக்க வேண்டும் என யோசிப்பவர்களே
வாழத் தெரிந்தவர்கள்…
• யாருக்கும் உன்னை பிடிக்கவில்லை என்றால்,
நீ இன்னும் நடிக்க கற்றுக் கொள்ளவில்லை என்றே அர்த்தம்…
• கல்வியின் வேர்கள் கசப்பானவை தான்;
ஆனால், அதன் கனிகளோ இனிப்பானவை…