• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Dec 28, 2021

சோம்பலுக்கு நாள் கொடுக்காதீர்கள். அதற்கு ஒரு நாளை கொடுத்தால்
அது அடுத்த நாளையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும்.

பொழுது போக்கையே வாழ்வாய் கொண்டோருக்கு
போதனைகள் எதற்கு?

எய்த அம்பும் இழந்த காலமும் ஒன்று !
இரண்டையுமே திரும்ப பெற இயலாது

இழந்தவைகளை குறித்து கலங்கிட நேரமும் இல்லை.
செயலில் உறுதியாய் இரு!

பேசும் முன் கேளுங்கள்.
எழுதும் முன் யோசியுங்கள் .
செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்…

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்…

தடுமாறி வீழ்வதில் தவறில்லை.
எழுந்திருக்க எண்ணமில்லாமல் இருப்பதுதான் தவறு…