• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்காக – நிதி உதவி வழங்கினர்..,

ByP.Thangapandi

Jan 28, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஜக்கம்மாள் கோவிலில் ஜமீன் காலம் முதலே ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கமாக உள்ளது.,

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி வரும் பிப்ரவரி 11ஆம் தேதி ஜக்கம்மாள் கோவிலின் கும்பாபிஷேக விழாவுடன் 12 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழா குழுவினர் தீர்மானித்து ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.,

சுமார் 18 கிராம மக்கள் ஒன்றி திரண்டு நடத்தும் இந்த ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முதற்கட்டமாக செட்டியபட்டி, நோட்டம்பட்டி, வாசிநகர், குன்னுத்துபட்டி மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் குறிஞ்சி நகர் உள்ளிட்ட 8 கிராம மக்கள் சாதி மத பேதமின்றி ஒன்றிணைந்தும், அதிமுகவைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு குழு நிர்வாகியும் இணைந்து சுமார் 13 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கிராம மக்களின் நிதியாக ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் மற்றும் தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் வாரிசுதாரர்களிடம் வழங்கினர்.,

தொடர்ந்து அனைத்து கிராம மக்களையும் ஒருங்கிணைத்து வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் 12 ஆம் தேதி பழமை வாய்ந்த ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டியை வெகுவிமர்சையாக நடத்த ஆலோசனை செய்யப்பட்டது.,