

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பால்மணி – பவுனம்மாள் தம்பதி, விவசாய கூலி தொழிலாளியான இவர்கள் அதே ஊரில் உள்ள தங்களது தோட்டத்து பகுதியில் வசித்து வருகின்றனர்.
இருவரிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்த சூழலில் இன்று இருவரிடையே வழக்கம் போல ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி பவுனம்மாள் கணவன் பால்மணி மீது சுடு எண்ணெய்-யை ஊற்றிவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார், அக்கம் பக்கத்தினர் மற்றும் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் கிணற்றில் இருந்து பவுனம்மாள்-யையும், எண்ணெய் ஊற்றியதில் படுகாயமடைந்த பால்மணியையும் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து விட்டு இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

