• Sat. May 4th, 2024

மதுரை பாலமேட்டில் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி

ByKalamegam Viswanathan

Jan 28, 2024

மதுரை மாவட்டம் பாலமேடு பாலமேட்டில் உள்ள பத்திரகாளி அம்மன் பள்ளி 35 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலைய ஆளுநருமான தமிழிசை தவிந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தபோது..,

பாலமேடு பத்திரகாளி அம்மன் கோவில் பள்ளியில் 35 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற பின் தங்கிய பகுதிகளில் பள்ளி ஆரம்பித்து குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தர வேண்டும் என்ற இவர்களின் நோக்கம் பாராட்டுக்குரியது. ஏனென்றால் கல்வி தான் அடிப்படை ஆனால் சில இடங்களில் கல்வி அரசியலாக்கப்படுவது கவலையை தருகிறது.

தமிழகத்தில் இந்தியை திணிக்கிறார்கள் இந்தி திணிப்பதையே ஒத்துக்கொள்ள மாட்டோம் என்று சொல்கிறார்கள். தனியார் பள்ளிகளில் இந்து சொல்லிக் கொடுக்கப்படுகிறதா, இல்லையா என்பதை தமிழக ஆட்சியாளர்கள் சொல்ல வேண்டும்.
இன்னொரு மொழியை படிப்பதால் குழந்தைகளுக்கு அரசாங்க த்தில் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும் ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களால் ஏன் அரசு பள்ளி மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றும், இன்னொன்று சிபிஎஸ்சி பள்ளிகளில் வந்த உடனே இந்தி திணிக்கப்படுகிறது என்கிறார்கள் ஆனால் தாய்மொழி கல்விதான் கற்றுத் தரப்படுகிறது.

அதேபோல் கல்வியை மத்திய பாடத்திட்டத்தில் இருந்து மாநில பாடத்திட்டத்திற்கு கொண்டு வருவோம் என்கிறார்கள் ஆனால் தொலைத்தது யார் தற்போது உள்ள ஆட்சியாளர்கள் தானே 20 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே தயவு செய்து கல்வியை கல்வியாளர்களிடம் விட்டுவிடுங்கள் என்பது எனது கோரிக்கை.

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கத்தை திறந்து வைக்க வந்த முதலமைச்சர்
ஏயின்ஸ்க்குரெண்டு கட்டிடங்கள் கட்டி முடித்து விட்டோம் மூணாவது கட்டிடத்தை இவர்கள் ஏன் கட்டவில்லை என்று கேட்டுள்ளார்.

எய்ம்ஸ் மாணவர்கள் ராமநாதபுரத்தில் மூன்று ஆண்டுகளாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை என்பது வெறும் கட்டிடங்கள் மட்டுமல்ல அது நோயாளிகள் மருத்துவர்கள் ஆனது மருத்துவப் பயிற்சி 3 ஆண்டுகள் முடித்திருக்கிறார்கள் ஐந்து ஆண்டு முடிப்பதற்குள் எய்ம்ஸ் வந்துவிடும்.

நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் 20 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது எய்ம்ஸ் எங்கே என்று கேட்டீர்களா எய்ம்ஸ் கொண்டு வரணும்னு முயற்சி செஞ்சீங்களா எய்ம்ஸ் மட்டும் அல்ல இன்றைக்கு 11 மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இ எஸ் ஐ மருத்துவ கல்லூரி 300 கோடி ரூபாயில் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள சிறப்பு சிகிச்சை கட்டிடம் அதே போல் திருநெல்வேலி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை கட்டிடம் 20 .20 கோடி ரூபாயில் அதேபோல் முதியோர்களுக்கான சிகிச்சை மருத்துவமனை சென்னையில் ஏற்படுத்தப்பட்டிருக்கு இது எல்லாம் மத்திய அரசு வந்த பிறகு கொடுத்தது.

இதேபோல் இரண்டே எய்ம்ஸ் தான் நாட்டில் இருந்தது இன்று 20 எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது அதுல நமது தமிழகத்திற்கு ஒன்று வருகிறது எய்ம்ஸ் என்பது சாதாரண மருத்துவமனை அல்ல ஒரு பெட் போட்டு வாசல் படி வைப்பதற்கு அதுஉலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை அதனால் பார்த்து பார்த்து தான் கட்ட வேண்டும் இதே போல் தான் ஹைதராபாத்தில் எய்ம்ஸ் ஆரம்பித்தபோது ஒரு கட்டம்தான் இருந்தது பின்பு படிப்படியாக கொண்டு வந்தோம் அதேபோல் மதுரையிலும் பார்த்து பார்த்து தான் கட்டுவார்கள் ஆனால் எய்ம்ஸ் கொண்டு வந்தது மோடி அவர்கள் தான் ஆகையால் இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்பது எனது கேள்வி

எய்ம்ஸ் இன் கட்டுமான பணி இன்னும் ஆரம்பிக்கவில்லை என்ற கேள்விக்கு..,

அதற்கான பிளான் போட்டாச்சு ரோடு போட்டாச்சு நிலம் கையகப்படுத்தும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு மூன்றாவது வருடம் குழந்தைகள் படிக்கிறாங்களா இல்லையா அவர்கள் கடைசி வருடம் முடிப்பதற்குள் எய்ம்ஸ் வந்துவிடும் என்றும், பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது தவறான முன்னுதாரணம் என்றும் ,பத்திரிகையாளர் பல்லடத்தில் தாக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. அது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது பத்திரிகையாளர்கள் நடுநிலையோடு நடந்து கொள்ள முடியவில்லை. இந்த செய்தியை சொன்னால் தாக்குவார்களா அந்த செய்தியை சொன்னால் தாக்குவார்களா என்ற பயத்தில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. நான்காவது தூணாக பத்திரிகை உள்ளது. ஆனால் அந்த தூணையே அசைத்துப் பார்க்கும் செயலாக பல்லடத்தில் நடந்த சம்பவம் உள்ளது.

காவல்துறையில் புகார் கொடுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்பவம் நடந்த பின்பு நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கது அல்ல தாக்கப்பட்டது தாக்கப்பட்டதானே இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *