• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சமந்தாவைப் பிரிய காரணம் இதுதான் – நாகசைதன்யா

Byமதி

Dec 18, 2021

சமந்தா, நாகசைதன்யாவின் விவகாரத்து இன்னும் பேசுபொருளாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, 7 ஆண்டுகளாக காதலித்து, 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு என படுபிஸியாக நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார். திரையுலகில் மிகவும் அன்னியோன்யமான தம்பதி என பலராலும் பாராட்டப்பட்டனர்.

இதனிடையே சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் விவாகரத்து முடிவை தத்தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றனர்.

இன்றுவரையிலும் இதுதான் பிரிவுக்கான காரணம் என்று சமந்தா தரப்பிலோ அல்லது நாகசைதன்யா தர்ப்பிலோ தெளிவாக ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் சமந்தா தான் காரணம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இதை பொறுக்க முடியாத சமந்தா இதை நிறுத்துங்கள் என வெளிப்படையாகவே கூறினார்.

இந்நிலையில், நடிகர் நாக சைதன்யா அண்மையில் அளித்த பேட்டியில், ’ஒரு திரைப்படத்தில் நான் ஒப்பந்தமாகும் முன் நான் அந்த திரைப்படத்தின் என்னுடைய கேரக்டர், கதை ஆகியவை என்னுடைய குடும்ப கெளரவத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை யோசித்து தான் நான் ஒப்புக் கொள்வேன். எனக்கே அந்தக் கதையின் மீது முழு திருப்தி இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சமந்தா கதைத் தேர்வில் கோட்டைவிட்டு கவர்ச்சி காட்டியதுதானோ அவர்களின் பிரிவுக்குக் காரணம் என இப்போது பேச்சு எழுந்துள்ளது. சமந்தா சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவர் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடுவார். மேலும் அவர் நடித்த காட்சிகளும், அவருக்கான வசனங்களும் ஆபாசமானதாக இருக்கும். அதேபோல் ஃபேமிலிமேன் 2 என்ற வெப் சீரிஸில் அவர் இலங்கை பெண்ணாக, தாரளமாக கவர்ச்சி காட்டியிருப்பார்.

இதுதான் சமந்தா, நாக சைதன்யாவிடம் பிளவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படங்களுக்குப் பின்னர் தான் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பெயருக்குப் பின்னால் இருந்த அக்கினேனி என்ற குடும்பப் பெயரை நீக்கினார். இதனால், சமந்தாவின் கதை தேர்வு தான் விவாகரத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இப்போது புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா சிங்கிள் பாடலிலும் சமந்தா சற்று கவர்ச்சி உடையில் தான் காட்சியளிக்கிறார். இதுதான் காரணம்.. அதுதான் காரணம்.. என மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பமாகிவிட்டது இவர்களது பிரச்சனை