“மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்”
“வேற்றுமைகளை களைந்து அனைவருக்கும் சம உரிமை சம வாய்ப்பு கிடைக்க பாடுபடுவேன்”
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன்”

“மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் மக்கள் நல சேவகராக கடமை ஆற்றுவேன்” என தமிழக வெற்றிக் கழக கொடியை விஜய் அறிமுகம் செய்தார்.
பனையூர் கட்சி அலுவலகத்தில் தவெக கொடியை விஜய் ஏற்றிய போது, தளபதி வாழ்க… வாழ்க… என கரகோஷம் எழுப்பி தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.