மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 15பி.மேட்டுப்பட்டி கிராமத்தில் வெள்ளை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மெய்யணான்டி திருக்கோவில் 9ம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பாக பொங்கல் வைத்து சுவாமிக்கு பல்வேறு மலர்களாலான மாலை அணிவித்து கிராமத்தினர் முன்பாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று இரவு அம்மன் பாடலுடன் திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், பூ, உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. சனிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் அன்னதானமும் ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை 15பி.மேட்டுப்பட்டி வெள்ளைநகர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.