• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

நடிகை குஷ்பு பகிர்ந்த திருவள்ளுவர் படத்தால் பரபரப்பு..!

ByA.Tamilselvan

Jan 17, 2023

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று (ஜன.16-ம் தேதி), பல அரசியல் பிரமுகர்கள் தங்கள் சமூகவலைதளத்தில் திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவு செய்து வாழ்த்து தெரிவித்தனர்.
பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு கோட் சூட் அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசி வருவதாக பாஜக மீது மற்ற அரசியல் கட்சிகள் புகார் கூறிவரும் நிலையில் அந்த புகாரை கண்டுகொள்ளாமல் பாஜக தலைவர் அண்ணாமலை காவி உடையில் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவு செய்தார்.
இந்த நிலையில் பாஜக பிரபலம் குஷ்பு கோட் சூட்டில் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர், பாஜகவுக்கு எதிரான கருத்தை தெரிவிக்கிறாரா? அல்லது வித்தியாசமாக திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவு செய்ய வேண்டும் என்று பதிவு செய்தாரா என்பது தெரியவில்லை. அதே நேரத்தில், தமிழர்களின் பெருமை மிகுந்த புலவர் திருவள்ளுவர் தினத்தை உலகமே கொண்டாடுவோம் என்று பதிவு செய்துள்ளார்.