• Thu. Feb 5th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

திருமங்கலத்தில் திருவையாறு – மார்கழி மாத உற்சவ விழா..!

ByKalamegam Viswanathan

Jan 6, 2024
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி நடத்திய மார்கழி உற்சவ விழாவில்,  திருமங்கலத்தில் திருவையாறு என்ற தலைப்பில் , திருப்பாவை, தசாவதாரம் நாட்டியா அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
மார்கழி மாதம் என்றாலே, தேவர்களுடைய மாதமாக கருதப்படுவதாகவும் ,  இம்மாதத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டியா அஞ்சலி நிகழ்ச்சிகள் திருக்கோவில்களிலும், கிராமப்புறங்களிலும் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் திருமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி நடத்திய மார்கழி உற்சவ விழாவில், திருப்பாவை நிகழ்ச்சியும் , தசாவதார நாட்டியா அஞ்சலி நிகழ்ச்சியும் பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்தன. பரதநாட்டியத்தில்  பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவியர் தசாவதார நிகழ்ச்சிகளை கண்கள் மற்றும் உடல் உறுப்புகளின் மூலமே செய்து காண்பித்து அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.திருவையாற்றில்  நடைபெறுவது போன்றே திருமங்கலத்திலும் தற்போது முதல் முறையாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.