• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியல் எண்ணும் பணி.,

ByKalamegam Viswanathan

Jul 21, 2025

தமிழ்கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது இதில் ரூபாய் 59 லட்சத்து 99 ஆயிரத்து 389 ரூபாய் ரொக்கமாகவும், 176 கிராம் தங்கமும், 2கிலோ 990 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் சென்ற மாதத்திற்கான உண்டியல் இன்று திறந்து எண்ணப்பட்டது.

இதில் திருப்பரங்குன்றம் கோயில் கண்காணிப்பாள முன்னிலையில் திருப்பரங்குன்றம் பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் கலந்து கொண்டனர்.