திருப்பரங்குன்றம் திருக்கோவிலில் இரண்டாவது முறையாக ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் உண்டியல் வருமானம் வந்துள்ளது

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
இதில் ரூபாய் 1 கோடியே 2 ரெண்டு லட்சத்து 60 ஆயிரத்து 550 ரூபாய் பணம் ரொக்கமாகவும், 151 கிராம் தங்கமும், 2 கிலோ 550 கிராம் வெள்ளியும், 7.900 கிலோ தகரம் மற்றும் 13.950 கிலோ செம்பு மற்றும் பித்தளை உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.
திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் சென்ற மாதத்திற்கான உண்டியல் இன்று திறந்து எண்ணப்பட்டது.

இதில் திருப்பரங்குன்றம் கோவில் வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் வருமானம் வந்துள்ளது. கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் உண்டியல் என்னும் போது ரூபாய் 1,05,01,654 வருமானம் கிடைக்கப்பெற்று இருந்தது. முதல்முறையாக அப்போதுதான் ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றது. குறிப்பாக அது இரண்டு மாதத்திற்கும் சேர்த்து ஒரு கோடி ரூபாய் கிடைக்கப்பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் வருமானம் கிடைக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை ஒரு மாதத்திற்கு மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் வருமானம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோவில் உதவியாளர் முன்னிலையில் மற்றும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் துணை ஆணையர், அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் மற்றும் திருப்பரங்குன்றம் ஆய்வாளர் திருக்கோவில் கண்காணிப்பாளர் கோயில் பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் கலந்து கொண்டனர்.




