• Thu. Mar 28th, 2024

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த திருமாவளவன்

Byகாயத்ரி

Nov 29, 2021

விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எஸ்சி- எஸ்டி மற்றும் கிறித்தவ மதம் மாறிய ஆதி திராவிட மாணவர்களுக்கு படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு இதற்கு முன்பு ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நீண்டகாலமாக அது மாற்றப்படாமலேயே இருந்தது.

தற்போது ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவித் தொகை பெறுவதற்கு வருமான வரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கான உதவித்தொகையும் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. படிப்பு உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் 1200 இல் இருந்து 1600 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஆராய்ச்சிக் கல்வி அதிகமாகப் பெறும் மாநிலம் தமிழ்நாடு தான். இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இவற்றைச் செய்திருக்கும் முதலமைச்சருக்கு விசிக சார்பில் எமது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *