• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

கே. டி. ஆர் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்த திலகபாமா..,

ByK Kaliraj

Jan 12, 2026

2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக, பாமக கூட்டணியை உறுதி செய்தனர்.

இந்நிலையில் பாமக பொருளாளர் திலகபாமா சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில்
அதிமுக முன்னாள் அமைச்சரும் ,விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான
கே. டி.ராஜேந்திரபாலாஜியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்பு இருவரும் சிறிது நேரம் அரசியல் நிலவரம் குறித்தும், வரும் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் கலந்துரையாடினர்.இந்த சந்திப்பு நிகழ்வில் அதிமுக மற்றும் பாமக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.