• Fri. Feb 14th, 2025

மாறிமாறி பொய் சொல்லும் கொள்ளையர்கள்

ByA.Tamilselvan

Aug 16, 2022

சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் கொள்ளையர்கள் மாறி மாறி பொய் சொல்வதால் விசாரணை பாணியை மாற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற கொள்ளைசம்பவம். இக் கொள்ளை சம்பவத்தில் 6 பேர் கைதாகி உள்ளனர். மேலும் கைதானவர்கள் ஒருவருக்கொருவர் மற்றவரிடம் தான் நகைகள் இருப்பதாக மாறி மாறி பொய்சொல்வதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அரும்பாக்கம் பெடரல் வங்கியில் 3 நாட்களுக்கு முன்பு 20கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இவ்வழக்கில் 6 பேர் கைதாகியுள்ள நிலையில் விசாரணையில் ஒருவருக்கொருவர் மற்றவரிடம் நகைகள் இருப்பதாக கூறி வருகின்றனர். இதனால் விசாரணை பாணியை மாற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர்.