• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

ஓட்டுக்காக மட்டும் நம்மளை பயன்படுத்துகிறார்கள்- நடிகை ரோஜா பேச்சு..,

ByKalamegam Viswanathan

Feb 23, 2026

எங்களது சமுதாய கோரிக்கைகளை ஏற்று அதை தேர்தல் அறிக்கையாக வெளியிடும் கட்சிக்கு வரும் தேர்தலில் தங்களது ஆதரவு – ரெட்டி நல சங்க மாநில தலைவர் ரவி பேட்டி.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை பகுதியில் தமிழ்நாடு ரெட்டி நலச் சங்க மண்டல மாநில மாநாடு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திரைப்பட நடிகையும் ஆந்திர முன்னாள் அமைச்சருமான ரோஜா செல்வமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். ரெட்டி சமுதாயத்தின் மாநில மாநாட்டை நடிகை ரோஜா குத்துவிளக்கு தொடங்கி வைத்தார். நடிகை ரோஜாவுக்கு விழா மேடையில் வீரவால் பரிசாக அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் ரெட்டி அரசாட்சிகளின் வரலாறு என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. ரெட்டி வம்சம் என்ற செயலியும் சமுதாய பாடலுக்கான இசை தட்டும் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய நடிகை ரோஜா: தென்மண்டல ரெட்டி மாநில மாநாட்டிற்கு வந்தது மகிழ்ச்சி. இது குல மாநாடு இல்லை குடும்ப மாநாடு என தெலுங்கில் பேசி தனது உரையை தொடர்ர்ந்தார். இங்கே ஓமந்தூரார் இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பான பாடலுக்கு இளைஞர்கள் நடனம் ஆடியது பெரிய சந்தோஷமாக இருந்தது .நான் தமிழ்நாட்டு மருமகள் சினிமாவிலும் அரசியலிலும் சாதனை புரிந்தது உங்களது ஆசிர்வாதத்தால் தான்.நமது குலத்தை சேர்ந்தவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், விஞ்ஞானி, வியாபாரிகள் என பல துறைகளிலும் சாதிக்க வேண்டும் .மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்க கோரிக்கை விடுத்தும் இதுவரை செய்து தரவில்லை ஓ பி சி பட்டியலில் சேர்க்க மறுக்கிறார்கள். கேவலம் ஓட்டுக்காக மட்டுமே நம்மை பயன்படுத்துகிறார்கள். நமது சமுதாய மக்கள் ஒற்றுமையுடன் இருந்து நமது அடையாளத்தை நிரூபிக்க வேண்டும் என பேசினார்.தொடர்ந்து அனைவருக்கும் வணக்கம் இந்த மாநாட்டிற்கு வந்தது மிகப்பெரிய சந்தோசம் உங்களுக்காக எந்த நேரத்திலும் உழைக்க தயாராக இருக்கின்றேன் என்ற வார்த்தைகளை மட்டும் தமிழில் பேசினார்.

இதனைத் தொடர்ந்து மாநாட்டில் அரசு தோட்டத்தை ஓமந்தூரார் தோட்டம் என பெயர் மாற்றிய மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தும், ஓமதூராருக்கு மணிமண்டபம் அமைத்து அதில் சிலை அமைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் ,ரெட்டி சமுதாய மக்களுக்கு மத்திய மாநில அரசு பணிகளில் வேலை வாய்ப்பு வழங்க வசதியாக ஓ பி சி சான்றிதழ் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் சுதந்திர தின விழா குடியரசு தின விழாவில் பல்வேறு சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் ஓமந்தூரார் பெயரிலும் விருது வழங்க வேண்டும்,மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் பெயர் சூட்ட வேண்டும் என பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் ரவி பேசும்போது: தங்களது சமுதாய மக்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்க வேண்டும். மேலும் ஓ பி சி சான்றிதழ் கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறோம் அதனையும் தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எங்களது சமுதாய மக்களின் கோரிக்கையை தேர்தல் அறிக்கையாக வெளியிடும் கட்சிகளுக்கே தங்களது ஆதரவு என தெரிவித்தார்.தங்களுக்கு சமுதாய மக்கள் ஒவ்வொரு தொகுதியிலும் 40 ஆயிரம் முப்பதாயிரம் 20 ஆயிரம் 15 ஆயிரம் என வாக்காளர்கள் இருக்கிறார்கள்.எங்களுக்கு எம் எல் ஏ பதவி தேவையில்லை நாங்கள் 15 முதல் 20% வரை தமிழகம் முழுவதும் இருப்பதால் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டால் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம் என கூறினார். மேலும் இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு ராஜா பூர்ண சந்திரன் அவர்கள்