• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 373 வழக்குகள் பதிவு

Byமதி

Nov 5, 2021

தீபாவளிக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதை மீறி சென்னையில் பட்டாசு வெடித்ததாக 373 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அறிவிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடிப்பவர்கள் மீது சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்படும் என தெரிவித்து இருந்தது. எனவே நேற்று இரவு வரை 373 வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை, ஐஸ்ஹவுஸ், கீழ்பாக்கம், அயனாவரம், ஓட்டேரி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இவ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் கடந்த 2020-ம் ஆண்டு 428 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.