பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த முதல்வர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் மற்றும் எஸ் ஆர் எம் யூ அமைப்பு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.

அப்போது பிரம்ம குமாரிகள் அமைப்பு மதுரையில் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஆண்டு விழாவிற்கான அழைப்பிதழ் முதல்வரிடம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் விமான நிலையத்திற்குள் செல்லும்போது அங்கிருந்த நபர் ஒருவர் திடீரென எனது மகனை காணவில்லை தலைவரேஎன்ன கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து முதல்வர் விமான நிலையத்திற்குள் சென்று ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். முதல்வர் வருகையின் போது திடீர் என கோஷம் எழுப்பிய நபரால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














; ?>)
; ?>)
; ?>)