• Thu. Mar 28th, 2024

கோவை மக்கள் தொட்டு துலங்காத துறையே இல்லை- முதல்வர் ஸ்டாலின்

ByA.Tamilselvan

May 19, 2022

கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். இதன்படி இன்று காலை கோவை வஉசி மைதானத்தில் ‘பொருநை’ அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தனியார் விடுதியில் தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். இதில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 3 மாவட்ட தொழில்துறையினர் கலந்து கொண்டனர். இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை; ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை. உற்பத்தி, ஏற்றுமதி உள்ளிட்டவற்றில் கோவை சிறந்து விளங்குகிறது.
தமிழகத்தின் 2-வது பெரிய தொழில் நகரம் கோவை மாவட்டம். சென்னைக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த நகரமாக கோவை திகழ்கிறது. அரசின் லட்சியத்தை அடைய கோவை மாவட்டத்தின் பங்களிப்பு முக்கியம். கோவை மாவட்டத்திற்கு தனியாக மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படும். கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் அறிவுசார் பூங்கா அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
கோவை மாவட்டநிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நீலகிரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்ளகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *