ஜல்லிக்கட்டிற்கு தடையில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று சோழவந்தானில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேரூர் திமுக சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியதை வரவேற்று திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் இனிப்புகள் வழங்கினார். பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, பேரூர் துணைச்செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், ஒன்றிய நிர்வாகி நீலமேகம், பேரூர் நிர்வாகிகள் சங்கங்கோட்டை சந்திரன் இளைஞர் அணி முட்டை கடை காளி மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.