மதுரையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் ஆளில்லாத நிலையில் பணம் இருந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவில் பகுதியில் செயல்பட்டு வந்த எஸ்பிஐ பேங்க் ஏடிஎம் இயந்திரத்தில் இன்று பணம் ஆளில்லாத நிலையில் இருந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்ததை தொடர்ந்து இது குறித்து வங்கி மேலாளருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீசார் இந்நிகழ்வு குறித்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே ஊழியரான முதியவர் ஒருவர் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் க்கு வந்திருந்த நிலையில் உடல் நிலை குறைவு காரணமாக அங்கேயே இயற்கை உபாதை வெளியானதால் அவர் அங்கிருந்து பணத்தை எடுக்காமலேயே புறப்பட்டு சென்று இருப்பது தெரிய வந்தது. மேலும் ஏடிஎம் இயந்திரத்தில் ஆளில்லாத நிலையில் பணம் இருந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.