கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் திமுக காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் நாட்டு வெடி குண்டுகள் வீசப்பட்டு வண்டலூர் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்தில் 18 நபர்கள் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்த முத்தமிழ்செல்வியும் முக்கிய குற்றவாளி என கைது செய்யப்பட்டதோடு குண்டர் சட்டமும் அவர்மீது பதியபட்டது இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் கொலை நடந்த இடத்தில் நான் இல்லை எனக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக வாதத்தை முன்வைத்த நிலையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்

இந்த நிலையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் மீண்டும் ஊராட்சி மன்ற தலைவியாக நேற்று பொறுப்பேற்றுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து படுகொலை செய்யப்பட்ட ஒன்றிய செயலாளர் ஆராமுதனின் ஆதரவாளர்கள் பதவி ஏற்றுக்கொண்ட திமுக ஊராட்சி மன்ற தலைவி முத்தமிழ் செல்விக்கு எதிராக ஊராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர் திமுக கட்சிக்கொடி ஏந்தி அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதோடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் தா மோ அன்பரசனுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இது போன்று கட்சியில் கொலை குற்றவாளிகளை பதவியில் நியமித்தால் மக்களிடம் எப்படி கட்சியை கொண்டு சேர்ப்பது எப்படி பணி செய்வது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகிறது எனக்கூறி கோஷங்களை எழுப்பினர்.
அதுமட்டுமின்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் உடனடியாக ஊராட்சி மன்ற தலைவி பதவியில் இருந்து விலக வேண்டும் இல்லை என்றால் ஆறமுதன் கொலை செய்யப்பட்ட இடத்தில் மிகப் பெரிய கூட்டத்தை கூட்டுவோம் எனக் கூறினர்.
இதனால் வண்டலூர் ரயில்வே ரயில் நிலையம் எதிரே உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. மண்ணிவாக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் வானமாமலை உட்பட இருபதுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..