• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேனி ரயில் மோதி விபத்து..,

ByKalamegam Viswanathan

Nov 15, 2025

மதுரை ரயில்வே நிலையத்தில் இருந்து தேனி மாவட்டம் போடி செல்லும் ரயிலானது நாள்தோறும் இயக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் இந்த ரயில் இன்று காலை 8.20 மணிக்கு மேல் மதுரை பழங்காநத்தம் – போடி லைன் தண்டவாள பகுதியில் மதுரை போடிலைன் பகுதியை சேர்ந்த சுகன்யா என்ற கல்லூரி மாணவி பால் பாக்கெட் வாங்குவதற்காக நடந்துசென்றுள்ளார்.

அப்போது ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி மாணவி நடந்து சென்றபோது தேனி ரயிலானது தண்டவாளத்தில் சென்றுள்ளது. அப்போது அந்த கல்லூரி மாணவி அங்கிருந்த பாதுகாப்பு கேட் அருகே வந்தபோது கை மீது திடீரென ரயில் உரசி மோதியதில் நல்வாய்ப்பாக நொடிப்பொழுதில் உயிர் தப்பினார்

ரயில் மோதியதில் கல்லூரி கை முழுவதுமாக நசுங்கி சேதமடைந்த நிலையில் மாணவி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்

நாள்தோறும் தேனி ரயில் சென்று வரக்கூடிய ரயில்வே தண்டவாளப் பகுதிகளில் பழங்காநத்தம் ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து பொதுமக்கள் அலட்சியமாக ரயில்வே தண்டவாளத்தை கடப்பதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது எனவே பொதுமக்கள் நடமாடக்கூடிய குடியிருப்புகள் இருக்கக்கூடிய பகுதிகளில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது