தேனியில் ‘மேனகா மில்ஸ்’ டிராப்பிக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி, வீரபாண்டி அருகே தப்புக் குண்டு கிராமத்தில் இன்று (பிப். 26) துவங்கியது.
தேனி மாவட்ட கிரிக்கெட் சங்கம், மேனகா மில்ஸ் இணைந்து ‘மேனகா மில்ஸ்’ டிராப்பிக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி தேனி அடுத்து வீரபாண்டி அருகே தப்புக் குண்டு கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் அகாடமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 9 மணிக்கு துவங்கியது. தேனி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் என்.ஆர். மணிவண்ணன் தலைமை வகித்தார். செயலர் ஆர்.எம்.லட்சுமண் நாராயணன் முன்னிலை வகித்தார். போட்டியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவி செயலர் என்.வெங்கட்ராமன் துவக்கி வைத்தார். குரூப்-ஏ பிரிவில், மேனகா மில்ஸ் தேனி, டேக் சொலுஷன், திருப்பூர் லெவன்ஸ், எஸ்.டி.பீட்டர்ஸ் கொடைக்கானல் ஆகிய 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப்-பி பிரிவில், இந்தியன் சிமென்ட்ஸ் சென்னை, அரசடி கிரிக்கெட் கிளப் மதுரை, எஸ்.சி.ஏ.சேலம், திருவள்ளூர் கிரிக்கெட் கிளப் என 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஏ டீமில் இடம் பெற்றுள்ள 4 அணிகளும், பி டீமில் இடம் பெற்றுள்ள 4 அணிகளுடன் மோதுகின்றன. இதில் ஏ டீமில் அதிக வெற்றி பெற்று, முதலிடம் பிடிக்கும் அணியுடன், பி டீமில் அதிக வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் அணியுடன், இறுதிப் போட்டியில் போதும். மார்ச் 4 ல், இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணிக்கு ‘மேனகா மில்ஸ்’ டிராப்பியை தட்டிச் செல்லும். தேனி மாவட்ட கிரிக்கெட் சங்க பொறுப்பாளர்கள் மகேஷ்ராஜா, ராம்பிரசாத் ஆகியோர் மேற்பார்வையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.