• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பிலிப்பைன்ஸில் உயிரிழந்த மருத்துவ மாணவரின் உடல் தாயகம் வர, தேனி எம்.பி., ப.ரவீந்திரநாத் ஏற்பாடு

தேனி மாவட்டம், போடி அருகே ராசிங்காபுரத்தை சேர்ந்த பாலசேகரன் மகன் சஷ்டிகுமார் 24, பிலிப்பைன்ஸில் மருத்துவம் படித்தார். கடந்த 15-ம் தேதி குளிக்க சென்று ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். இவரின் விசா முடிந்ததால் உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் எம்.பி., முயற்சி மேற்கொண்டு சஷ்டிகுமாரின் உடலை இந்தியா கொண்டு வர ஏற்பாடு செய்தார்.

பிலிப்பைன்ஸில் இருந்து உடலை இந்தியா கொண்டு வர ஆகும் செலவை ஒரு தொண்டு நிறுவனம் ஏற்றிருந்தது. இந்நிலையில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் மொத்த செலவையும் மத்திய அரசே செலுத்த ஏற்பாடு செய்துள்ளார். பிலிப்பைன்ஸில் இருந்து இந்தியாவிற்கு நேரடி விமான சேவை இல்லாததால் வரும் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை தான் சஷ்டி குமார் உடல் இந்தியா வந்தடையும் என, தெரிகிறது.