• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தேய்பிறை அஷ்டமி பூஜை..,

ByKalamegam Viswanathan

May 21, 2025

மதுரைக் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிவ ஆலயங்களில் உள்ள கால பைரவருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வடைமாலை மற்றும் தயிர் சாதம் படைக்கப்படும்.

பக்தர்களுக்கு, அர்ச்சணைகள் செய்து பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம்.
மதுரை தாசில்தார் சௌபாக்ய விநாயகர் ஆலயம், மதுரை அண்ணாநகர் யாரைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயம், வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயம், சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயம், மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர், சர்வேஸ்வரர் ஆலயம், மதுரை கோமதி புரம் ஜூப்பிலி டவுன் ஞான சக்தி விநாயகர் ஆலயங்களில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.