கோவை, திருச்சி ரோடு அருகே உள்ள வெங்கடலட்சுமி நகரில் குடும்பத்துடன் குடியிருந்து வரும் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) முரசொலி வீட்டின் காம்பவுண்டுக்குள் நிறுத்தப்பட்டு இருந்த விலை உயர்ந்த சைக்கிள் ஒன்றை மர்ம நபர் திருடிச் சென்று உள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினரான முரசொலி அவர்கள், கடந்த 5 மாதங்களாகக் கோவை வெங்கடலட்சுமி நகர் பகுதியில் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 1 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் ஒன்பது முப்பது மணி அளவில் இவரது வீட்டின் வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த சைக்கிள் ஒன்றை அடையாளம் தெரியாத நபர் ஒருவன் சாதுரியமாகத் திருடிச் சென்று உள்ளான்.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான”Theft at the very home of Thanjavur MP Murasoli…”
மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிலேயே பகல் நேரத்தில் துணிச்சலாக நுழைந்து திருடன் கைவரிசை காட்டி உள்ளது குடியிருப்புவாசிகளை உரைய வைத்து உள்ளது.
காவல்துறை ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும்
என அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.