• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஆவின் பால் பூத்தில் திருட்டு

ByN.Ravi

Apr 24, 2024

திருப்பரங்குன்றம் அருகே, முல்லை நகரில் ஆவின் பாலக கூட்டை உடைத்து,
ரூபாய் 5 ஆயிரம் மதிப்புள்ள நெய் மற்றும் பால் பொருட்களையும் ரூபாய் 2000 பணம் கொள்ளை.
கைவரிசை காட்டிய கொள்ளையர்களை திருநகர் போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தனக்கன்குளம், முல்லை நகரில் வசித்து வருபவர் சுந்தரேசன் (வயது 59). இவர் முல்லை நகர் மெயின் ரோட்டில் ஆவின் பாலகம் வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு 7 மணியளவில் கடை வியாபாரம் முடித்து ஆவின் பாலகத்தை பூட் டி சென்றார். பின்னர், நள்ளிரவில் இரண்டே கால் மணியளவில், பால் வாங்கி வைக்க பால்டிப்போவிற்கு சுந்தரேசன் ஆவின் பாலத்துக்கு வந்த போது, பூத்தின் மேல் பகுதியை உடைத்து உள்ளே சென்று ஆவின் பாலத்தில் இருந்த பால் ,நெய், தேன் நெல்லிக்காய், போன்ற ரூபாய் 5000 மதிப்புள்ள பொருள்களையும், மேலும் கல்லாவில் இருந்த 2000 ரூபாய் திருடி சென்றுள்ளது தெரிய வந்தது.
இது குறித்து, சுந்தரேசன் மகன் யோக கண்ணன் திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், இது குறித்து, திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகிறார்கள்.