• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தீரன் சின்னமலை 219வது நினைவு தினத்தை முன்னிட்டு அலங்காநல்லூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ByN.Ravi

Aug 4, 2024

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் உள்ள ஏ.எம்.எம். பள்ளி வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 219வது நினைவு தினத்தையொட்டி அங்கு அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சங்க தலைவர் விஜயன், செயலாளர் அழகப்பன் , பொருளாளர் சிதம்பரநாதன், ஆலோசகர்கள் சேகர், ஜெயராமன், உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து திமுக சார்பில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய துணை சேர்மன் சங்கீத மணிமாறன், நகர செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் அருண் விளையாட்டு மேம்பாட்டு அணிய பிரதாப், சமூக ஆர்வலர் சங்கர் கணேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர்கள் பேரவை சார்பாக அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் உள்ள நினைவு தூனில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தீரன் சின்னமலை சிலைக்கு மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாநில பொருளாளர் திலகபாமா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகநாதன், கிழக்கு மாவட்ட செயலாளர் அழகர்சாமி, கிழக்கு மாவட்ட தலைவர் குரு பாலமுருகன், மாவட்ட செயலாளர் ராஜா, ஒன்றிய தலைவர் விஜயகுமார், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ஜெயசீலன், மதுரை மேற்கு மண்டல செயலாளர் சிவானந்தம், மதுரை மண்டல பொறுப்பாளர்கள் ஹக்கிம், திருநாவுக்கரசு, சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், தொகுதி செயலாளர் சக்கரபாணி, பொருளாளர் சதீஷ், நிர்வாகிகள் மயில்வாகனம், ராணுவ பிரிவு தனபால் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்க அஞ்சலி செலுத்தினர். முக்குலத்தோர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் சார்பாக சார்லஸ் ,செந்தில்குமார் ஆதி முத்துக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மண்டல செயலாளர் அழகர், சோழவந்தான்
மாவட்டச் செயலாளர் மெடிக்கல் ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் யோகநாதன்,
அழகாபுரி ரவி, பேரூர் செயலாளர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் புறநகர் மாவட்ட தலைவர் ராஜசிம்மன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாலமேடு கவுண்டர்கள் உறவின்முறை சங்கம் சார்பாக பேரூராட்சி துணைத் தலைவர் ராமராஜ் தலைமையில் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
15 பி மேட்டுப்பட்டி கிராம கவுண்டர்கள் உறவின்முறை சங்கம் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பால் குடம் எடுத்து வநது தீரன் சின்னமலை சிலைக்கு பால் அபிஷேகம் செய்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.