• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திரையரங்குகள் வலிமையடைய வலிமை படத்தை எதிர்நோக்கும் திரையரங்குகள்

கொரோனா மூன்றாவது அலை கடந்த வருட டிசம்பர் மாதக் கடைசியில் பரவ ஆரம்பித்தது. அதனால், ஜனவரி முதல் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கினார்கள். அதனால், பல முக்கிய படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டது. தள்ளி வைக்கப்பட்ட படங்களை இந்த மாதக் கடைசியிலிருந்து அடுத்தடுத்து வெளியிட உள்ளார்கள்.தமிழில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த பத்துக்கும் மேற்பட்ட படங்களில் எந்த ஒரு படமும் வணிக ரீதியாக வெற்றியை பெறவில்லை அதனால்தனித்திரையரங்குகளை.
தற்காலிகமாக மூடி விட்டார்கள்.
இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை விஷால் நடித்த ‘வீரமே வாகை சூடும்’ உள்ளிட்ட மூன்று படங்கள் தியேட்டர்களில் வெளிவந்தது. இதில் ‘வீரமே வாகை சூடும்’ படம் தியேட்டர்களுக்கு மக்களை வரவழைக்கும் என வினியோகஸ்தர்களும், ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள். படத்தின் டீசர், டிரைலர் பரபரப்பாக இருந்ததால் அந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தியேட்டர்களுக்கு மக்கள் அதிக அளவில் வரவில்லை. படம் மிகக் குறைவான வசூலை கடக்கவில்லை திரையரங்குக்கு மக்களை கொண்டுவரக்கூடிய படங்களாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை எதிர்பார்க்கின்றனர் அதனால் அவர்களதுஅவர்களது அடுத்த எதிர்பார்ப்பாக அஜித்குமார் நடித்து இந்த மாதம் வெளிவர உள்ள ‘வலிமை’ படம் மட்டுமே உள்ளது. அதற்கு இன்னும் மூன்று வாரங்கள் இருப்பதால் அதற்கு முன்னதாக வரக்கூடிய கடைசி விவசாயி, எஃஐஆர் படங்கள் மக்களை தியேட்டருக்கு கொண்டு வருமா என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்