• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ரயிலில் பலியான வாலிபர்கள்.., முகவரி, தகவல் தொடர்பு கொள்ள முடியாமல் போலீஸார் திணறல்.

ByKalamegam Viswanathan

Jul 20, 2023

திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதை அருகே ரயிலில் பலியான வாலிபர்கள், பலியான வாலிபர்களின் உடல்கள் மற்றும் முகம் சிதைந்து காணப்படுகிறது. முகவரி, தகவல் தொடர்பு கொள்ள முடியாமல் போலீஸார் திணறல்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே இரண்டு வாலிபர்கள் பிணமாக இருப்பது குறித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ளவர்கள் தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் மதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு இரு வாலிபர்கள் முகங்கள் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தனர்.

போலீசார் முதல் கட்ட விசாரணையில் ஒருவரது கையில் மகேஸ் என பச்சை குத்தியிருப்பதும் மதுரையிலிருந்து செல்ல அறுவது ரூபாய் ரயில் பயணச்சீட்டு வைத்துள்ளனர்.

மதுரையில் இருந்து செல்வதற்கு பயண சீட்டு வைத்துள்ள இவர்கள் திருப்பரங்குன்றத்தில் பலியானது எப்படி என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .

மேலும் அவர்கள் வைத்திருந்த ஃபோன் நம்பர் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
பலியான வாலிபர்கள் இருவரும் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருக்கின்றனர்.

விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரின் உடலையும் உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.