• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இந்தியர்களின் திறமையை உலகமே வியக்கிறது… பிரதமர் மோடி

ByA.Tamilselvan

Nov 2, 2022

இந்தியர்களின் இளைஞர்களின் திறமையை கண்டு உலகமே வியப்பதாக பிரதமர் மோடி பொங்களூருவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களுருவில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 3 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டை இன்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது ..உலகளவில் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையில் இருக்கும் இந்த நேரத்தில் இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதை பார்த்து உலகமே நம் மீது நம்பிக்கை வைத்துள்ளது. இந்தியா உலகளாவிய உற்பத்தி சக்தியாக உருவாகி வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்வது என்பது ஜனநாயகத்தின் முதலீடு, உலகத்திற்கான முதலீடு. இந்தியாவில் அன்னிய முதலீட்டுக்கான கதவுகள் திறந்தே உள்ளன.நாம் நம் பொருளாதாரத்தை வலுப்படுத்த நமது அடிப்படைகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்றும் கூறினார்.