• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முளைபாரியை வாய்க்காலில் விட்டுச் சென்ற பெண்கள்..,

ByAnandakumar

Aug 3, 2025

கரூர் மாவட்டத்தில் ஆடி 18யை முன்னிட்டு காவிரி ஆற்றில் இறங்கி குளிக்க, வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை தடை விதித்த நிலையில் முளைபாரியுடன் வந்த பெண்களை வாய்க்காலில் விட்டுச் சென்றனர்.

ஆடி18 என்று அழைக்கப்படும் ஆடிப்பெருக்கு முன்னிட்டு காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் புனித நீராடி கன்னிமார் சுவாமி கும்பிடுவது வழக்கம். காவிரி ஆற்றில் 17,000 கன அடிக்கும் மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் ஆற்றின் இரு கரைகளை தொட்டு தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, வழிபாடு நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நெரூர், வாங்கல், புகழூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட காவிரி கரையோரங்களில் பொதுமக்கள் இறங்கும் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆற்றுக்கு அருகில் உள்ள கோவில்களில் வழிபாடு நடத்த போலீசார் அனுமதி அளித்து வந்தாலும் ஆற்றுக்கு செல்ல அனுமதி மறுத்து வருகின்றனர்.

உள்ளூர் பகுதி பெண், குழந்தைகள் முளைப்பாரி வைத்து சாமி கும்பிட்டு வாய்க்காலில் கரைத்துச் சென்றனர்

மாயனூரில் ஒரு சில உள்ளூர் வாசிகள் ஆபத்தை உணராமல் காவிரி ஆற்றில் குளித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீராடவும், சாமி கும்பிடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.