• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வெப் தொடரை இயக்குகிறார் வெற்றிமாறன்?!

இயக்குனர் வெற்றிமாறன் வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார். வாடிவாசல் படம் தொடங்குவதற்கு முன் வெப் தொடருக்கான வேலைகள் ஆரம்பிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன…

சமீபகாலமாக, முன்னணி திரைப்பட இயக்குனர்களும் வெப் தொடர்களில் கவனம் செலுத்துகின்றனர். வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை எடுத்து வருகிறார். கதைநாயகனாக சூரியும், வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர். ஜெயமோகன் இதற்கான கதையை எழுதியுள்ளார்.

இந்தப் படம் முடிந்ததும் அவர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்குகிறார். வாடிவாசல் சி.சு.செல்லப்பா எழுதிய நாவல். லாக்கப், வெக்கை நாவல்களை மேலோட்டமாக தழுவி விசாரணை, அசுரன் படங்களை எடுத்தது போல் வாடிவாசல் நாவலின் சிறிய பகுதியை எடுத்து இந்தப் படத்தை உருவாக்குகிறார். தாணு தயாரிக்கிறார்!

அத்துடன் விஜய்யின் 68 வது படத்தை வெற்றிமாறன் இயக்குவதாகவும் கூறப்படுகிறது. சென்ற மாத இறுதியில் வெற்றிமாறனின் வீட்டிற்கு சென்று தனுஷ் அவரை சந்தித்து பேசினார். தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கப் போகும் படத்துக்கான பேச்சுவார்த்தை அது எனவும் இன்டஸ்ட்ரியில் ஒரு தகவல் உலவுகிறது.

இத்தனை பிஸி ஷெட்யூல்டில் ரைட்டர் படத்தில் நடித்த ஆண்டனியை வைத்து வெப் தொடர் ஒன்றை வெற்றிமாறன் இயக்குகிறார். வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை வெப் தொடராக எடுக்கும் எண்ணம் வெற்றிமாறனுக்கு இருந்தது. அதுதான் இந்த வெப் தொடரா என்ற பேச்சும் கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது!