கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை யூப்லி ஆண்டு கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் 2025- ம் ஆண்டை யூப்லி ஆண்டாக உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை மலை மாவட்டத்தில் நாகப்பட்டினம் மறை வட்டத்திலுள்ள நாகப்பட்டினம், கீவளூர், கருங்கண்ணி, திருப்பூண்டி உள்ளிட்ட 15 பங்குகளுக்கு புனித சிலுவை திருப்பயணமாக கொண்டு செல்லப்பட்ட வணங்கப்பட்டது. இறுதியாக வேளாங்கண்ணி பங்கிற்கு கொண்டு வரப்பட்ட சிலுவையை வேளாங்கண்ணி பங்குத்தந்தை அற்புதராஜ் கையில் ஏந்தி கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் சிலுவை திருப்பயணமாக புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு வைக்கப்பட்டு வணங்கப்பட்டது.
இந்த திருப்பயணத்தில் நாகை மறை வட்டத்தில் உள்ள 15 பங்குகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் யூப்லி கொடியை ஏந்தி ஊர்வலதத்தில் ஜெபித்தனர். பின்னர் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெபித்தனர். சிலுவை திருப்பயண பேரணியில் பங்கேற்றாளே பாவம் மன்னிக்கப்படுதல், பாவத்தண்டனைகள் நீங்குதல் மற்றும் சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை..