• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திருச்சிற்றம்பலத்துடன் மோதும் மாயத்திரை

“அறிமுக இயக்குநர் சம்பத் குமார் இயக்கத்தில், அசோக் குமார் நடிப்பில் உருவாகும் படம் ‘மாயத்திரை’.அசோக்குமாருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார். இவர்களுடன் சாந்தினி தமிழரசன், ‘காதல்’ சுகுமார், ‘இரவின் நிழல்’ மாஸ்டர் ஆரோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
அருணகிரி இசையமைக்கும் இந்தப் படத்தை சாய் தயாரிக்கிறார். ‘மாயத்திரை’ படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
‘மாயத்திரை’ படம் குறித்து படக் குழுவினர் கூறுகையில், “இந்த ‘மாயத்திரை’ ஒரு பேய் படம். ஆனால், வழக்கமான பேய் படங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ஆறிலிருந்து அறுபதுவரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு பார்க்கலாம்.சரஸ்வதி எண்டர்பிரைசஸ் சார்பில் விநியோகஸ்தரான செந்தில், சேலம் கண்ணன் இருவரும் இந்த ‘மாயத்திரை’ படத்தை வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியீடுகின்றனர்.

‘மாயத்திரை’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 102-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. நடிகர் அசோக் நடித்த படங்களில் அதிகமான வெளிநாடுகளில் ரீலிசாகும் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் வெளியாகும் அதே நாளில் அமெரிக்கா, நியூசிலாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் இப்படம் வெளியாகிறது.”