• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர்

ByA.Tamilselvan

Aug 3, 2022

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி தற்போது தைவானுக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, தைவானில் பதற்றம் அதிகரித்துள்ளது
தைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் சீனா தொடர்ந்து உலக அரங்கில் அறிவுறுத்தியுள்ளது. அதேவேளை, தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகிறது. தைவான் விவகாரத்தில் அமெரிக்கா நுழைவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம் என சீனா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது
இதற்கிடையே, அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார். தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான்சி செல்வார் என தெரிவிக்கப்பட்டது. நான்சி பெலோசியின் இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நான்சி பெலோசி தற்போது தைவானுக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, தைவானில் பதற்றம் அதிகரித்துள்ளது.