• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விசாரணை கைதி கண்ணாடி துண்டுகளை விழுங்கி தற்கொலை முயற்சி

ByA.Tamilselvan

Apr 23, 2022

மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி கண்ணாடி துண்டுகளை விழுங்கி தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார்.
மதுரை முனிச்சாலை இஸ்மாயில் புரத்தை சேர்ந்த கார்த்தி என்கின்ற காட்டு ராஜா என்பவர் மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சமீபகாலமாக கார்த்திக்கை சந்திக்க உறவினர்கள் யாரும் விரவில்லை.இதனால் கார்த்தி கடந்த சில நாட்களாக மன வேதனையிலும் .மன உளைச்சலிலும் இருந்து வந்துள்ளார். சிறையில் அவர் தங்க வைக்கப்பட்ட இடத்துக்கு பின்புறம் கழிவறைக்கு அருகில் சிறிய கண்ணாடித் துண்டு இருந்ததாகவும், அதை எடுத்து விழுங்கிய தாகவும் அதிகாலை 4 மணிக்கு தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து கார்த்திக் (எ) காட்டு ராஜாவுக்கு சிறை உள் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து வயிறு வலிப்பதாக அவர் கூறியதால் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் தற்போது அவருக்கு. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.