• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மதுரையில் மயங்கிய முதியவரை மீட்டு ஆட்டோவில் அனுப்பி வைத்த போக்குவரத்து காவல்துறையினர்

ByKalamegam Viswanathan

Apr 20, 2023

மதுரையில் வெயில் தாக்கத்தால் சாலையில் மயங்கிய முதியவரை மீட்டு சொந்த பணத்தில் ஆட்டோ ஏற்றி அனுப்பி வைத்த போக்குவரத்து காவல்துறையினர்.பொதுமக்கள் பாராட்டினர்
மதுரை எல்லீஸ் நகர் சந்திப்பு அருகே இன்று போக்குவரத்து சார்பு ஆய்வாளர் டார்ஜூஸ் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு சாலை விதிகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வந்தனர். அப்பொழுது அந்த வழியாக நடந்து வந்த முதியவர் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளார்.
இதனை கண்ட காவலர்கள் உடனடியாக அந்த முதியவரை மீட்டு அவருக்கு தண்ணீர் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தி காவலர்கள் சொந்த பணத்தில் ஆட்டோ ஏற்றி முதியவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். போக்குவரத்து காவல்துறையினரின் இந்தச் செயலை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.