உதகை அருகே முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள மாயார் நீர் மின் நிலைய பகுதியில் கன்றுக்குட்டியை வேட்டையாடிய புலியின் வீடியோ காட்சிகளை சுற்றுலா பயணிகள் பதிவு செய்துள்ளனர்….
இதனால் மாயார் பகுதியில் கால்நடைகள் வளர்க்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர் .

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள சிங்காரா நீர் மின் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி சாலைகளில் புலி நடமாட்டம் காணப்பட்டு வருகிறது. அதேபோல் மாயார் நீர் மின் நிலைய பகுதியிலும் புலிகளின் நடமாட்டம் உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மசினகுடியில் இருந்து சிங்காரா , மாயார்,பகுதிகளுக்கு Safari செல்கின்றனர்.
இந்த நிலையில் மாயார் நீர் மின் நிலைய பகுதியில் பிரம்மாண்டமாக உள்ள தண்ணீர் குழாய் மேல் படுத்து இருந்த புலியை கண்ட சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் அதைப் படம் பிடித்தனர். சுற்றுலா பயணிகளை முறைத்து பார்த்து புலி பின்பு கீழே இறங்கி வேட்டையாடிய கன்றுக்குட்டியை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. இந்த காட்சிகளை சுற்றுலா பயணிகள் படபடப்புடன் வீடியோ பதிவு செய்துள்ளது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.