• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல் பங்கில் இளைஞர் செய்த காரியம்.. மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்!

By

Sep 2, 2021 ,

தஞ்சை சாந்த பிள்ளை கேட் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கிற்கு இன்று இரவு 7 மணியளிவில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பெட்ரோல் போடுவது போல் நடித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வைத்திருந்த பணப்பையை திருட முயன்றுள்ளனர்.

இதனை அறிந்த ஊழியர் பணத்தை திருட முயன்ற அவர்களை பிடிக்க முயன்ற போது இருவர் வேகமாக வண்டியில் தப்பிச் சென்று விட்டனர். ஒரு வாலிபர் மட்டுமே சிக்கிக் கொண்டுள்ளார். அந்த வாலிபரை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் வாகனங்களுக்கு பெட்ரோல் போட வந்த பொதுமக்கள் பிடித்து விரட்டி விரட்டி தர்ம அடி கொடுத்தனர்.

இதுகுறித்து மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் இருந்து அந்த வாலிபரை மீட்டு முதற்கட்ட விசாரணை நடத்தில் அவர் தஞ்சை வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.

இந்நிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் அந்த வாலிபர் மீது புகார் அளிக்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது .இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.