• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

புதிதாக பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்ற சிவகங்கை சாம்பவிகா பள்ளி ஆசிரியர்கள்

ByG.Suresh

Jun 10, 2024

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளித்துறை அறிவித்த நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வெயிலில் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது என அறிவித்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பல்வேறு முன்னேற்பாடுகள் பணிகள் முடிவடைந்து அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்ட நிலையில் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் புதிதாக பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்களும் பழைய மாணவிகளும் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் சேகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் சிவகங்கை மேலூர் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.