• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வைத்த டாஸ்மாக் ஊழியர்..,

ByKalamegam Viswanathan

May 20, 2026

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹர்விபட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடை 5512 அருள்மிகு ஆண்டவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் சுமார் 500 மீட்டர் உட்பட்ட அமைந்துள்ளது என இதனை அகற்றக் கோரி பொதுமக்கள் வற்புறுத்தி உள்ளனர்.

மேலும் இந்த கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்து அந்த பத்து ரூபாய்க்கு பாட்டில் புதியதாக ஸ்டிக்கர் ஒட்ட சொல்லுவதாக கடையின் மேற்பார்வையாளர் முருகன் மது வாங்க வந்தவர்களிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்ட மதுபிரியர்கள் ஆத்திரத்துடன் பத்து ரூபாயை திருப்பி அளிக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மதுபிரியர்களுக்கும் கடையின் மேற்பார்வையாளர் முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பள்ளி வளாகத்திற்கு 500 மீட்டர் உட்பட்டு இந்த கடை இயங்கி வருவதால் இதனை அகற்ற கோரியும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.