• Sat. Jun 6th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி!!

ByKalamegam Viswanathan

May 21, 2026

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கம்பூர் ஊராட்சி சின்னகற்பூரம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் உள்ள மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது.
இதனால் பள்ளிக்கூடம் அருகில் இருப்பதால் பள்ளி குழந்தைகளுக்கு அபகாயகரமான சூழல் உள்ளது.

இது பற்றி கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் பலமுறை நிறைவேற்றியும்,அரசு அலுவலர்கள் கவனத்திற்கும்,முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு கொடுத்தும் சரி செய்யப்படவில்லை.
இப்பொழுது இடிந்த இடங்களில் மேல் பூச்சு பூசி வேலை வெறும் பெயரளவுக்கு செய்யப்படுகிறது. இதனால் பயனில்லை.

மக்களோடு கோரிக்கை பள்ளி குழந்தைகளின் நலன் கருதி பள்ளிக்கூடம் அருகில் இருந்து இந்த நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்பதே இதையெல்லாம் கருத்தில் கொண்டு மதுரை மாவட்ட ஆட்சியரும் தமிழ்நாடு அரசும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.