
தமிழக வெற்றிக் கழகம் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள த.வெ.க கட்சி கொடி ஏற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கும், பெரியார் சிலைக்கும் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தி, சேலம் செல்லும் சாலையில் தங்கள் கட்சி கொடிகளுடன் சென்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தமிழக வெற்றி கழகம் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை மக்களுக்கு எடுத்துக் கூறியும், தளபதி வாழ்க என்ற கோஷங்களை எழுப்பி நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
