• Wed. Jul 9th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

சாதிகளே வேண்டாம் என்பதைச் சொல்ல வரும் ‘சூரியனும், சூரியகாந்தியும்’

Byதன பாலன்

Mar 19, 2023

டிடி சினிமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் புதிய படம் ‘சூரியனும் சூரியகாந்தியும்’.இப்படத்தில் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஸ்ரீஹரி, விக்ரம் சுந்தர் ஆகிய மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ரிதி உமையாள் கதையின் நாயகியாக நடிக்கிறார்.இவர்களுடன் இயக்குநர் சந்தானபாரதி, இயக்குநர் செந்தில்நாதன், குட்டிப்புலி புகழ் ராஜசிம்மன், மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, ரிந்து ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, இயக்குநர் ஏ.எல்.ராஜா மிக முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார்.திருவாரூர் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஆர்.எஸ்.ரவி பிரியன் இசையமைத்திருக்கிறார். வீரசெந்தில்ராஜ் படத்தொகுப்பு செய்ய, மஸ்தான் நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ஏ.எல்.ராஜா, கவிஞர் செங்கதிர் வாணன் பாடல்கள் எழுத, ஸ்பீடு மோகன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன் பணியாற்றியுள்ளார். இணைத் தயாரிப்பாளராக டெய்லி குருஜி பணியாற்ற, பத்திரிகை தொடர்பாளர் பணியை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு, படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.ராஜா. இவர் பார்த்திபன், தேவயானி நடிப்பில் உருவான ‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’ மற்றும் தெலுங்கில் ‘அக்கிரவ்வா’ ஆகிய படங்களை இயக்கியவர்.சமூகத்தில் நடந்த பல உண்மை சம்பவங்களின் தொகுப்பாக மட்டும் இன்றி, இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான சாதி படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.சாதி பாகுபாட்டால் பல்வேறு துறையை சார்ந்த பல திறமையாளர்கள் நசுக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவதை மையப்படுத்தி எழுதிய கதையில், காதல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்து கமர்ஷியல் அம்சங்களையும் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.ராஜா.படம் குறித்து இயக்குநர் ஏ.எல்.ராஜா கூறுகையில், “இந்தப் படத்தில் இடம் பெறும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்கள்தான்.பொதுவாக நான் இயக்கும் படங்கள் அனைத்திலும் சமூகத்திற்குத் தேவையான விஷயங்களைத்தான் கமர்ஷியலாக சொல்வேன். ‘தீக்குச்சி’ படத்தில் கல்வியை எப்படி வியாபாரமாக்குகிறார்கள் என்பதை சொல்லியிருந்தேன்.அதேபோல், ’நினைக்காத நாளில்லை’ படத்தில் நட்பு என்றால் எப்படி இருக்க வேண்டும்? காதல் என்றால் என்ன..? என்பதற்கான விளக்கத்தை கொடுத்திருப்பேன்.அதுபோல், இந்த ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தில் சாதியால் திறமையானவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறேன்.

மதுரை மற்றும் சென்னைதான் படத்தின் கதைக் களம். பொதுவாக தமிழ்ச் சினிமாவில் நாயகர்கள் மதுரையில் இருந்துதான் சென்னைக்கு வருவார்கள். ஆனால், இந்த கதையில் ஹீரோ, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வது போல் வைத்திருக்கிறோம்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அப்புக்குட்டி மிக சிறப்பாக நடித்திருக்கிறார். ‘அழகர்சாமியின் குதிரை’ படத்திற்கு பிறகு அப்புக்குட்டிக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. ஆனால், இந்த படம் அந்த வருத்தத்தை போக்கி அவருக்கு மீண்டும் விருது வாங்கித் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இயக்குநர் சந்தானபாரதி சாரின் கதாபாத்திரமும் மிக சுவாரஸ்யமானதாகவும், அவர் இதுவரை நடிக்காத வேடமாகவும் இருக்கும்.இந்தப் படத்தை பொருத்தவரை கதைதான் ஹீரோ. வித்தியாசமான கதைக் களத்தில் சாதியை மையப்படுத்திய படமாக இது இருக்கும். தற்போது தமிழ் சினிமாவில் சாதி படங்கள் இயக்குவது ரெண்டாகிவிட்டாலும், இதுவரை வந்த சாதி படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இந்த படம் இருக்கும்.

சாதிப் படங்கள் எடுத்தாலே பல சர்ச்சைகள் எழும். ஆனால் அந்த சர்ச்சைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் “சாதியே வேண்டாம். அதைத் தூக்கி எறிய வேண்டும்” என்பதுதான் என் கருத்து. அதைத்தான் இந்தப் படத்திலும் சொல்லியிருக்கிறேன்.எல்லோரும் சாதியைப் பற்றிப் பேசும் படங்களை எடுக்கிறார்கள். ஆனால், அதில் “என் சாதி உயர்ந்த சாதி”, “உன் சாதி தாழ்ந்த சாதி” என்றுதான் பேசுகிறார்களே தவிர, அதில் இருக்கும் பாதிப்பு மற்றும் தீர்வு குறித்து பேசுவதில்லை. சாதி என்ற ஒரு விஷயத்தையே தூக்கியெறிந்துவிட்டு மனிதனாக வாழ வேண்டும் என்று சொல்வதுதான் இந்த கதை.சாதியால் இன்றும் பலர் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, ஒருவனின் திறமையை பார்ப்பதைவிட அவனுடைய சாதியை பார்க்கும் அளவுக்கு இன்று மக்கள் மனதில் சாதி பிரிவினை வளர்ந்திருக்கிறது.சினிமா துறையில்கூட சாதி பார்த்துதான் படம் கொடுக்கிறார்கள். கதை நல்லா இருக்கா.. இயக்குநர் திறமையானவரா.. என்றெல்லாம் பார்க்காமல் இயக்குநர் என்ன சாதி? என்று கேட்டு அவருக்கு படம் கொடுக்கப்படுகிறது. சினிமாவில் மட்டும் அல்ல.. இந்தப் பிரச்சனை தற்போது அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது.அப்படிப்பட்ட சாதி பிரிவினையால் பல்வேறு துறைகளில் பல திறமையானவர்கள் இன்றும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள், என்ற உண்மையை சொல்வதோடு, சாதியே வேண்டாம் என்பதை வலியுறுத்தும் சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவும் இருக்கும்.

சாதிப் பிரச்சனையை மையப்படுத்திய கதை என்றாலும் அதை முழுக்க, முழுக்க நகைச்சுவை உணர்வோடு நகர்த்தி சென்றிருக்கிறேன். சாதி பற்றி பேசினாலும், படத்தின் அடுத்தடுத்த காட்சிகளும், இறுதிக் காட்சியும் ரொம்பவே வித்தியாசமாகவும், யூகிக்க முடியாதபடியும் இருக்கும்.என் படங்களில் வடிவேலு நடித்திருத்திருந்தார். முதல்முறையாக அவர் இல்லாத படமாக இது இருப்பதால் காமெடியை கதையோடு சேர்த்து சொல்லியிருக்கிறேன். திரைக்கதை மற்றும் காட்சிகளை கையாண்ட விதம், எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் ஆகியவை படத்தை நிச்சயம் ரசிக்க வைக்கும்…” என்றார் நம்பிக்கையுடன்..!மதுரை, தேனி, திண்டுக்கல், மைலம், திருவண்ணாமலை, சென்னை ஆகிய பகுதிகளில், 35 நாட்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்று, தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன”