

தலித் இளைஞர் இறந்து பல மணி நேரம் ஆகியும் புகார் கொடுத்தும் எஃப் ஐ ஆர் போடாமல் அலட்சிய காட்டும் காவல் துறையை கண்டித்து
காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கீழ் செவ்வாய் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மர்மமான முறையில் வாயில் நுரை தள்ளுபடி இறந்து கிடந்துள்ளார்.உடனே அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே தங்கள் வரை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். உடனே கல்லூரி நிர்வாகம் பிணவறையில் வைத்து விட்டு கண்டும் காணாதது போல் சென்று விட்டனர்.

தங்கதுரை மனைவி அஞ்சலை தகவல் அறிந்து கல்லூரி நிர்வாகத்தை கேட்ட பொழுது எந்த பதிலும் தெரிவிக்கவில்லை கூறப்படுகிறது. உடனே தங்கவேல் உறவினர்களும் கடலூர் மற்றும் பெரம்பலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஒரு மனிதன் இறந்து பல மணி நேரமாகியும் காவல் நிலையத்தில் புகார் வாங்கவும் இல்லை எஃப் ஐ ஆர் போடவும் இல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளும் தகவல் தெரிவித்தும் அலட்சியம் காட்டும் காவல்துறையினரை கண்டித்து நாளை மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்கதுரை குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

