திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் மீது தலை வைத்து தூங்கும் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை என்பது நட்ட கல்லாகவே உள்ளது. இந்நிலையில் சமூக ஆர்வலர் தாண்டிக்குடியை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் சாலையின் நடுவில் அதிகாரிகள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தூங்குகின்றனர். இதனால் மனு மீது தலை வைத்து தூங்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இவரது போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.





